Pages

Tuesday, June 25, 2013

Albion Estate people live in the Store Room for three year in the hill country of Sri Lanka, still not resettled,

மூன்று வரு­டங்­க­ளாக களஞ்­சி­ய­சா­லையில் வாழ்ந்து வரும் எல்­பியன் தோட்ட மக்கள் அக்­க­றை­யீ­ன­மாக நிர்­வா­கமும் அர­சி­யல்­வா­தி­களும் (அக்­க­ரப்­பத்­தனை நிருபர்) அக்­க­ரப்­பத்­தனை பிளான்­டேசன் கம்­பெனி நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட எல்­பியன் தோட்­டத்தின் ஆட்லோ பிரிவில் ஏற்­பட்ட லயன் அறை தீயி­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட ஆறு குடும்­பங்­களை சேர்ந்த 20 க்கும் மேற்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்கள் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தோட்­டத்தின் பழைய களஞ்­சி­ய­சா­லை­யி­லேயே தற்­கா­லி­க­மாக தங்­க­வைக்­கப்­பட்ட நிலையில் வாழ்ந்து வரு­கின்­றனர். 2010 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எல்­பியன் தோட்­டத்தின் ஆட்லோ பிரிவின் லயன் அறை ஒன்றில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்தில் 12 லயன் அறைகள் முற்­றாக எரிந்து சாம்­ப­லா­கி­ய­துடன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளது உடை­மை­களும் சம்­ப­லா­கின. இச்­சம்­ப­வத்தை அடுத்து பாதிப்­புக்­குள்­ளான 12 குடும்­பங்­களும் தோட்­டத்தின் பழைய களஞ்­சி­ய­சா­லையில் தற்­கா­லி­க­மாக தங்­க­வைக்­கப்­பட்­டன. எந்த வித­மான அடிப்­படை வச­தி­களும் இல்­லாத மேற்­படி களஞ்­சி­ய­சா­லையில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக வாழும் இவர்­க­ளுக்கு தோட்ட நிர்­வா­கமோ அல்­லது அர­சியல் வாதி­களோ வீடு­களை அமைத்து கொடுக்க எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றார்கள். கடந்த சில வாரங்­க­ளாக பெய்­து­வரும் கடும் மழை கார­ண­மாக தொடர்ந்து இங்கு தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் குறிப்பிடுவதுடன் தமக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிநிற்கின்றனர். Source from Veerakesari-25.06.2013

No comments:

Post a Comment