Home »
» MP Yogarajan Condamn the government's activities
MP Yogarajan Condamn the government's activities
Written By Joining Hands Network on Tuesday, June 25, 2013 | 9:52 PM
அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டிக்கிறார் யோகராஜன் எம்.பி.
பல்வேறு காரணங்களினால் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக எண்ணற்ற கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் இன்று தமது வழிபாட்டுத்தலங்களையும் இழந்து கடவுளையும் தற்காலிக இடங்களில் வைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையானது மிகவும் வேதனையளிக்கிறது என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன்.
நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் பற்றி நாள்தோறும் பேசி வரும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, பூமாரியம் மன் ஆலயம் அகற்றப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
80வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்புக் கொண்ட கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளமையால் அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளார்கள். இது போன்ற செயற்பாடுகளால் இனங்களுக்கிடையே எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அபிவிருத்தி என்ற போர்வையிலேயே அரசாங்கம் இன்று பூமாரியம்மன் கோவிலை அகற்றியுள்ளது. அதே இடத்தில் ஒரு புத்தவிகாரை இருந்திருந்தால் அப்படி செய்திருப்பார்களா? எனவே அந்தக் கோவிலை அதே இடத்தில் வைத்தே அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியும் ஆனால் அதனை செய்யாதுள்ளமைக்கு வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத் திப் பணிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பணிகளுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் எனவும் கூறினார்.
Source from Veerakesary-23.06.2013