Home »
» Albion Estate people live in the Store Room for three year in the hill country of Sri Lanka, still not resettled,
Albion Estate people live in the Store Room for three year in the hill country of Sri Lanka, still not resettled,
Written By Joining Hands Network on Tuesday, June 25, 2013 | 9:39 PM
மூன்று வருடங்களாக களஞ்சியசாலையில் வாழ்ந்து வரும் எல்பியன் தோட்ட மக்கள்
அக்கறையீனமாக நிர்வாகமும் அரசியல்வாதிகளும்
(அக்கரப்பத்தனை நிருபர்)
அக்கரப்பத்தனை பிளான்டேசன் கம்பெனி நிர்வாகத்திற்கு உட்பட்ட எல்பியன் தோட்டத்தின் ஆட்லோ பிரிவில் ஏற்பட்ட லயன் அறை தீயினையடுத்து பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று வருடங்களாக தோட்டத்தின் பழைய களஞ்சியசாலையிலேயே தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எல்பியன் தோட்டத்தின் ஆட்லோ பிரிவின் லயன் அறை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 லயன் அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் தோட்டத் தொழிலாளர்களது உடைமைகளும் சம்பலாகின.
இச்சம்பவத்தை அடுத்து பாதிப்புக்குள்ளான 12 குடும்பங்களும் தோட்டத்தின் பழைய களஞ்சியசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டன.
எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மேற்படி களஞ்சியசாலையில் கடந்த மூன்று வருடங்களாக வாழும் இவர்களுக்கு தோட்ட நிர்வாகமோ அல்லது அரசியல் வாதிகளோ வீடுகளை அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தொடர்ந்து இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் குறிப்பிடுவதுடன் தமக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிநிற்கின்றனர்.
Source from Veerakesari-25.06.2013