Home »
» மாளிகாவத்தை எபல் தோட்டத்தில் இருக்கும் 577 குடும்பங்களை வெளியேறுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாளிகாவத்தை எபல் தோட்டத்தில் இருக்கும் 577 குடும்பங்களை வெளியேறுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Written By Joining Hands Network on Thursday, January 23, 2014 | 4:36 AM
கொழும்பு 10, மாளிகாவத்தை, எபல் தோட்டம் பிரதேசத்தில் உள்ள 577 குடும்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாளிகாவத்தை, எபல் தோட்டம் பிரதேசத்தில் இருந்த குடியிருப்புகள் உடைத்து அகற்றப்பட்டமைக்கு எதிராக அங்கு குடியிருந்தவர்கள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எபல் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக குடியிருப்புகளை ஏற்படுத்தி அங்கிருந்த குடும்பங்கள் நிரந்த வீடுகளை நிர்மாணித்து கொள்ளும் வரை, அவர்கள் வாடகை வீடுகளில் குடியிருந்தால், அந்த வீட்டுக்கான வாடகையை நகர அபிவிருத்தி அதிகார சபை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எபல் தோட்டம் பகுதியில் இருந்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றியுள்ளதுடன் அதற்கு பதிலாக அங்கிருந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
source from web