Home »
» People’s Protest Against Destructive Projects
People’s Protest Against Destructive Projects
Written By Joining Hands Network on Friday, June 19, 2026 | 10:51 AM
அபிவிருத்தி” என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம்
“அபிவிருத்தி” என்ற பெயரில் பொன்னாவெளி மற்றும் கீராஞ்சி கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள் காற்றாலை மின்சார திட்டம், கனிம மணல் அகழ்வு திட்டம் மற்றும் சுண்ணாம்பு கல் அகழ்வு திட்டங்களை செயல்படுத்த அரசு, அதிகாரிகள் மற்றும் சில தேசிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 28 ஆம் திகதி வேரவில் முதல் கீராஞ்சி வரை மக்கள் பேரணி மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழில், தென்னைத் தோட்டங்கள், குடியிருப்புகள், பாடசாலைகள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதஸ்தலங்கள் ஆகியவை இந்த திட்டங்களால் பாதிக்கப்படவுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கனிம மணல் அகழ்விற்காக 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 13 சதுர கிலோமீட்டர் பகுதி பொன்னாவெளி மற்றும் கீராஞ்சி கிராம சேவையாளர் பிரிவுகளின் குடியிருப்பு பகுதிகளாக உள்ளமை குறித்து மக்கள் கடும் கவலை வெளியிட்டனர்.
மேலும், வலைப்பாடு கிராமத்தின் எருமைத்தீவு கடற்கரைப் பகுதியில் இருந்து உள்நாட்டுப் பகுதிக்குள் 1 கிலோமீட்டர் அகலத்திலும் மேற்குத் திசையில் 6 கிலோமீட்டர் நீளத்திலும், அதாவது பெய்முனை முதல் கீரிக்குடா வரையிலான பகுதி இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட மக்கள், அவற்றை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் மனுவிற்கும் மக்கள் கையெழுத்திட்டனர்.
People’s Protest Against Destructive Projects Implemented in the Name of “Development”
Residents have accused the government, relevant authorities, and several national institutions of planning to implement a wind power project, a mineral sand mining project, and a limestone mining project within the Ponnaweli and Kiranchi Grama Niladhari divisions under the guise of “development.”
In opposition to these projects, a protest march and demonstration were organized on May 28 from Veravil to Kiranchi. A large number of local residents, civil society organizations, religious leaders, and social activists participated in the protest.
According to the residents, nearly 2,000 families living in these areas will be directly affected by the proposed projects. Their livelihoods, including fisheries, coconut cultivation lands, settlements, schools, fishing harbours, and religious places such as churches, have been identified within the project areas.
It was further revealed that a land area of 16 square kilometers has been selected for mineral sand mining within the Poonakary Divisional Secretariat Division. Of this, 13 square kilometers fall within the residential areas of the Ponnaweli and Kiranchi Grama Niladhari divisions, causing serious concern among local communities.
Residents also strongly opposed the selection of a project area stretching from the Erumaithivu coastal belt in Valaipaddu village, extending 1 kilometer inland and 6 kilometers westward, covering the area from Peymunai to Keerikuda.
The people emphasized that these projects would have severe impacts on community life, the environment, and the future of coming generations, and demanded that the authorities immediately halt the proposed developments.
During the protest, community members also signed a petition addressed to the President calling for intervention and protection of their lands and livelihoods.
“සංවර්ධනය” යන නාමයෙන් ජනජීවිත විනාශ කරන ව්යාපෘතිවලට එරෙහි ජන විරෝධය
“සංවර්ධනය” යන නාමයෙන් පොන්නාවෙලි හා කිරාංචි ග්රාම නිලධාරී කොට්ඨාශයන් තුළ සුළං විදුලි ව්යාපෘතිය, ඛනිජ වැලි කැණීම් ව්යාපෘතිය සහ හුණුගල් කැණීම් ව්යාපෘතිය ක්රියාත්මක කිරීමට රජය, අදාළ බලධාරීන් සහ ජාතික ආයතන කිහිපයක් සැලසුම් කර ඇති බවට ප්රදේශවාසීන් චෝදනා කරති.
මෙම ව්යාපෘතිවලට විරෝධය පළ කරමින් මැයි 28 වන දින වේරුවිල් සිට කිරාංචි දක්වා විරෝධතා පා ගමනක් සහ ජන උද්ඝෝෂණයක් සංවිධානය කරන ලදී. මෙම අවස්ථාවට ප්රදේශවාසී ජනතාව, සිවිල් සංවිධාන නියෝජිතයින්, ආගමික නායකයින් සහ සමාජ ක්රියාකාරීන් විශාල පිරිසක් සහභාගී වූහ.
මෙම ව්යාපෘති සඳහා තෝරාගෙන ඇති භූමි ප්රදේශ තුළ පවුල් 2000කට ආසන්න ජනතාවක් ජීවත් වන අතර, ඔවුන්ගේ ජීවනෝපායන්ට අයත් ධීවර කටයුතු, පොල් වගා භූමි, ජනාවාස, පාසල්, ධීවර වරායන් සහ ආගමික ස්ථාන වන දේවස්ථාන ද මෙම ව්යාපෘතිවල බලපෑමට ලක්වීමට නියමිත බව ජනතාව පෙන්වා දුන්හ.
පූනකරි ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ ඛනිජ වැලි කැණීම් සඳහා වර්ග කිලෝමීටර් 16ක භූමි ප්රදේශයක් තෝරාගෙන ඇති අතර, එයින් වර්ග කිලෝමීටර් 13ක් පොන්නාවෙලි සහ කිරාංචි ග්රාම නිලධාරී කොට්ඨාශවල ජනාවාස ප්රදේශවලට අයත් වීම පිළිබඳව ජනතාව දැඩි කනස්සල්ල පළ කළහ.
එසේම වලෙයිපාඩු ගම්මානයේ එරුමයිතීවු වෙරළ තීරයෙන් අභ්යන්තරයට කිලෝමීටර් 1ක පළලින් සහ බටහිර දෙසට කිලෝමීටර් 6ක දිගින්, පේයිමුනයි සිට කීරිකුඩා ප්රදේශය දක්වා මෙම ව්යාපෘතිය ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇති බව ද අනාවරණය විය.
මෙම ව්යාපෘති ජනජීවිතයට, පරිසරයට සහ ඉදිරි පරම්පරාවන්ගේ අනාගතයට බරපතළ බලපෑම් ඇති කරන බව පෙන්වා දුන් ප්රදේශවාසීන්, ඒවා වහාම නතර කරන ලෙස බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටියහ.
මෙහිදී ජනාධිපතිවරයා වෙත යොමු කිරීම සඳහා වූ පෙත්සමකටද ජනතාව අත්සන් තැබූහ. See less
