Journey through landless people.... Let's voice out for voiceless people who displaced by war,Natural disaster , Mass development activities and Human & Elephant Co-Existence issue and Plantation workers of Sri Lanka
Powered by Blogger.
Latest Post

MP Yogarajan Condamn the government's activities

Written By Joining Hands Network on Tuesday, June 25, 2013 | 9:52 PM

அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டிக்கிறார் யோகராஜன் எம்.பி. பல்­வேறு கார­ணங்­களினால் தமது சொந்த இடங்­களில் இருந்து இடம்­பெ­யர்ந்து அக­தி­க­ளாக எண்­ணற்ற கஷ்­டங்­க­ளுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் இன்று தமது வழி­பாட்­டுத்­த­லங்­க­ளையும் இழந்து கட­வு­ளையும் தற்­கா­லிக இடங்­களில் வைக்கும் துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். இந்த நிலை­மை­யா­னது மிகவும் வேத­னை­ய­ளிக்­கி­றது என்­கிறார் ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர். யோக­ராஜன். நல்­லி­ணக்­கத்­தையும் சமத்­து­வத்­தையும் பற்றி நாள்­தோறும் பேசி வரும் இந்த அர­சாங்கம் தமிழ் மக்­களின் உணர்­வு­களை மதிக்­காமல் இவ்­வாறு தான்­தோன்­றித்­த­ன­மாக நடந்து கொள்­வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்­பு­கின்றார். கொழும்பு, கொள்­ளுப்­பிட்டி, பூமா­ரி­யம் மன் ஆலயம் அகற்­றப்­பட்­டமை தொடர்பில் கருத்து தெரி­வித்த போதே அவர் இதனை தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, 80வரு­டங்­க­ளுக்கு மேலாக பழைமை வாய்ந்த வர­லாற்று சிறப்புக் கொண்ட கொள்­ளுப்­பிட்டி பூமா­ரி­யம்மன் ஆலயம் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டுள்­ள­மையால் அப்­ப­குதி வாழ் தமிழ் மக்கள் மிகுந்த வேத­னை­ய­டைந்­துள்­ளார்கள். இது போன்ற செயற்­பா­டு­களால் இனங்­க­ளுக்­கி­டையே எப்­படி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யி­லேயே அர­சாங்கம் இன்று பூமா­ரி­யம்மன் கோவிலை அகற்­றி­யுள்­ளது. அதே இடத்தில் ஒரு புத்­த­வி­காரை இருந்­தி­ருந்தால் அப்­படி செய்­தி­ருப்­பார்­களா? எனவே அந்தக் கோவிலை அதே இடத்தில் வைத்தே அபி­வி­ருத்திப் பணி­களை செய்ய முடியும் ஆனால் அதனை செய்­யா­துள்­ள­மைக்கு வேறு கார­ணங்கள் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் அபி­வி­ருத் திப் பணி­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. அவ்­வா­றான பணி­க­ளுக்­காக பல தியா­கங்­களை செய்­த­வர்கள் எனவும் கூறினார். Source from Veerakesary-23.06.2013

Albion Estate people live in the Store Room for three year in the hill country of Sri Lanka, still not resettled,

மூன்று வரு­டங்­க­ளாக களஞ்­சி­ய­சா­லையில் வாழ்ந்து வரும் எல்­பியன் தோட்ட மக்கள் அக்­க­றை­யீ­ன­மாக நிர்­வா­கமும் அர­சி­யல்­வா­தி­களும் (அக்­க­ரப்­பத்­தனை நிருபர்) அக்­க­ரப்­பத்­தனை பிளான்­டேசன் கம்­பெனி நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட எல்­பியன் தோட்­டத்தின் ஆட்லோ பிரிவில் ஏற்­பட்ட லயன் அறை தீயி­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட ஆறு குடும்­பங்­களை சேர்ந்த 20 க்கும் மேற்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்கள் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தோட்­டத்தின் பழைய களஞ்­சி­ய­சா­லை­யி­லேயே தற்­கா­லி­க­மாக தங்­க­வைக்­கப்­பட்ட நிலையில் வாழ்ந்து வரு­கின்­றனர். 2010 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எல்­பியன் தோட்­டத்தின் ஆட்லோ பிரிவின் லயன் அறை ஒன்றில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்தில் 12 லயன் அறைகள் முற்­றாக எரிந்து சாம்­ப­லா­கி­ய­துடன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளது உடை­மை­களும் சம்­ப­லா­கின. இச்­சம்­ப­வத்தை அடுத்து பாதிப்­புக்­குள்­ளான 12 குடும்­பங்­களும் தோட்­டத்தின் பழைய களஞ்­சி­ய­சா­லையில் தற்­கா­லி­க­மாக தங்­க­வைக்­கப்­பட்­டன. எந்த வித­மான அடிப்­படை வச­தி­களும் இல்­லாத மேற்­படி களஞ்­சி­ய­சா­லையில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக வாழும் இவர்­க­ளுக்கு தோட்ட நிர்­வா­கமோ அல்­லது அர­சியல் வாதி­களோ வீடு­களை அமைத்து கொடுக்க எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றார்கள். கடந்த சில வாரங்­க­ளாக பெய்­து­வரும் கடும் மழை கார­ண­மாக தொடர்ந்து இங்கு தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் குறிப்பிடுவதுடன் தமக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிநிற்கின்றனர். Source from Veerakesari-25.06.2013

People who are still not allowed to resettle in Mugamali have been suffering for Habitats.

Written By Joining Hands Network on Tuesday, June 18, 2013 | 10:28 PM

மீள்குடியேற அனுமதிக்கப்படாத முகமாலை மக்கள் தங்கியிருக்க இடமின்றி நடுத்தெருவில் தவிப்பு [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:37.16 AM GMT ] கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் ரயில் பாதையில் தங்கியிருந்த முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருவார காலத்தினுள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றிடமின்றி தாம் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். முகமாலை- அம்பளைவளை, இந்திராபுரம் போன்ற யுத்தம் நடைபெற்ற சில பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாமையினால் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. குறித்த பிரதேசங்களில் 1996ம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னதாக சுமார் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. இந்நிலையில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நிலையில் சுமார் 35வரையான குடும்பங்கள் தற்போது பளை பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் தங்கியிருக்கின்றனர். இவர்களை ஒருவார காலத்தினுள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ள அதிகாரிகள் வடக்கிற்கான ரயில் பாதை அமைப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இது தவிர்க்க முடியாததெனவும் கூறியிருக்கின்றனர். எனினும் மக்களுடைய பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமையினால், மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகள் கூட இல்லாத நிலையில் மக்கள் எங்கு செல்வதென தெரியாத நிலையில் உள்ளனர். மேலும் தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்காலிகமாக நீண்டகாலம் வாழ்ந்துவந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் அதிகாரிகள் பொறுப்பாக தமக்கான மாற்றிடங்களை வழங்கவில்லையென குற்றம்சாட்டியுள்ளனர் மக்கள். அத்துடன், தம்மை அதிகாரிகளும், பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளும் நடுதெருவில் விட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் தம்மை தற்காலிகமாகவேனும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதேவேளை மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத அல்லது கண்ணிவெடியகற்றப்படாத பகுதி என கூறப்படும் மேற்படி அம்பளைவளை, மற்றும் இந்திராபுரம் ஆகிய கிராமங்களில் எழுதுமட்டுவாழ் பகுதியூடாக வரும் சில கும்ல்கள் நுழைந்து பெறுமதியான மரங்கள், மற்றும் கைவிடப்பட்ட காவலரண்களிலுள்ள மரங்கள், இரும்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் எவ்வாறு அந்தப் பகுதிக்குள் செல்கின்றனர் என கேள்வியெழுப்பியுள்ள மக்கள் அந்த விடயம் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். source from Tamilwin.com

We want our land, people from six villages of Mullaithivu handed over the Petition to the Divisional Secretary

எமது நிலம் எமக்கு வேண்டும்: முல்லைத்தீவில் 6 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்க ஏற்பாடு [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:39.21 PM GMT ] முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள்,தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்குறித்த ஆறு கிராமங்களிலும் வசித்துவரும் மக்களில் 90 வீதமானோர், கொக்கிளாய் வாவிக்கு மேற்கு பக்கமாகவுள்ள (அநுராதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட 9 சிங்கள கிராமங்களை ஒருங்கிணைத்து, முல்லைத்தீவில் 2011ம் வருடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச் சிங்களப் பிரதேசமாக்கப்பட்டுள்ள பகுதியாகும்.) தமது பூர்வீக நில புலங்களில் நெற்செய்கையை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார்கள். விவசாய செய்கையே இந்த மக்களின் வாழ்வின் சாரமும், வாழ்வின் ஆதாரமுமாகும். பரம்பரை வழித்தோன்றலாக தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது, உண்டு, உழைத்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்த தாம், 1983ம் வருடம் ஏற்பட்ட கலவரங்களினால் எல்லைக் கிராமங்களில் ஏற்பட்ட அச்சம் மற்றும் அசாதாரண நிலைமைகள் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும், மாவட்டத்துக்கு வெளியேயும் வாழ்ந்து வந்ததாகவும், 2008-2009ம் வருடங்களில் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்னி மீதான இறுதி யுத்தம், தமது இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்தது மட்டுமல்லாமல், மாவட்டத்தை விட்டே தம்மை வெளியேறச்செய்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், 2012 ஜனவரி 19 அன்று முல்லை.கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர தமக்கு அரசு அனுமதி வழங்கியதோடு, தமது விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச்சிங்கள பிரதேச செயலர் பிரிவாக்கப்பட்டுள்ள பகுதிக்குள், தமது 2590 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் (நெற்செய்கை காணிகள்) அகப்பட்டுள்ளதாகவும், இதுவொரு திட்டமிட்ட நில அபகரிப்பெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவினால் தமது காணிகளுக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான காணி அனுமதிப்பத்திரங்கள் தம்மிடமிருப்பதாகவும், எனவே தமது நிலம் தமக்கே வேண்டுமெனவும் அவர்கள் குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர். Source from: Tamilwin.com

Main Activities

01. Conducting Research.
02. Pressurizing for land rights.
03. Mobilizing the landless people.
04. File court cases regarding land issues.
05. Networking the affected communities.
06. Providing Trainings for leaders.
07. Conduct workshops.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Praja Abhilasha Network - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger